சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்; ஜனாதிபதி அதிதி

ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 சர்வதேச கண்காட்சி இன்று  காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இலங்கை உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு, பொருளாதார அபிவிருத்திக் அமைச்சு அடங்கலான 5 அமைச்சுக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. 31ம் திகதி வரை கண் காட்சி நடைபெறும்.

300க்கும் அதிகமான இலங்கை உற் பத்தியாளர்களின் சுமார் 400 கடைத் தொகுதிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதோடு 75 வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

வர்த்தக முயற்சியாளர்களினதும் சிறு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் வகையில் முதற் தடவையாக இந்தக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply