நாம் என்ன செய்யவேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது : ஜனாதிபதி
நாம் என்ன செய்யவேண்டும்? இதனை இவ்வாறுதான் செய்யவேண்டும் என்று எவரும் கூறவேண்டியதில்லை. நாட்டில் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையான தூரம் பயணிப்பதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இது எமது மக்களுக்காக நாம் செய்யவேண்டிய அர்ப்பணிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரமான சக்திகள் மீண்டும் அவர்களில் கொடூரமான தலையை உயர்த்துவதற்கு எமது தாய்நாடு இனியொருபோதும் இடமளிக்காது என்பதனை நாம் சான்றுபடுத்தியுள்ளோம். அர்ப்பணித்து பெற்றுக்கொண்ட சமாதானத்தை இலங்கைக்குள் இருந்து கொண்டே அனுபவியுங்கள். நாங்கள் சமாதான பாதையில் முன்னோக்கிச்சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் அவர் சொன்னார்.
இலங்கை ஏற்றுமதி சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எக்போ 2012 கண்காட்சியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply