மேர்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை நேரில் அழைத்து விளக்கம் கோருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்ஷ் தலைவராக இருக்கும்வரை டி.ஏ.ராஜபக்ஷ் பரம்பரை ஆட்சியில் இருக்கும் வரை தன் மீது எவரும் கை வைக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இக்கருத்து குறித்து அவரிடமே விளக்கம் கோருமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply