நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சர்வகட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு : தினேஷ் குணவர்தன

கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வகட்சி தலைவர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். இன்னும் ஒரு சில தினங்களில் இச் சந்திப்பு இடம் பெறுமென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சர்வ கட்சித் தலைவர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்த பின்னர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை அமுல்படுத்துவது எவ்வாறு என்பதை ஆராய ஜனாதிபதி குழுவொன்றை அமைக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல் படுத்தும்படி ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா பிரேரணையொன்றை முன் வைத்தது. அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரச தரப்புக்குள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன

. இதற்கு முடிவு கட்டும் நோக்கிலேயே ஜனாதிபதி சர்வகட்சித் தலைவர்கள் பிரதிநிதிகளின் சந்திப்பை மேற்கொண்டு அவர்களின் கருத்தைப் பெறத் தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply