பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை : TNA
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.அரசியல் தீர்வு காணும் நோக்குடன் அரசு கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டினார்.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த காலங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தைக் கடத்தும் போக்கில் இருந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருதுகிறார்.
சர்வதேச தலையீடு இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் தீர்வுத் திட்டம் நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
உள்நாட்டுத் தீர்வு
இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வில் சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது. உள்நாட்டு தீர்வுத் திட்டத்திலேயே நம்பிக்கை கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது.
அதற்காக அமையும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெற வேண்டும் என்று அரசாங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply