நாடுகள் மீது குரோதம் கொள்ளத் தேவையில்லை : பசில் ராஜபக்ஷ
நாடுகள் மீது குரோத உணர்வுடன் செயற்பட வேண்டிய அவசியமில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நாடுகளுடன் குரோதம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் மீது வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுடனம் நட்புறவுடன் பழகுவதே மிகவும் சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்போ2012 கண்காட்சிகளில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டங்களின் ஊடகவன்றி மக்களை தெளிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு பொருள் பயன்பாட்டை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசப்பற்றை அதிகரிக்கும் நோக்கில் மஹாத்மா காந்தியும் இதனையே செய்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.
தமது அறிவுக்கு எட்டிய வகையில் ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் பல ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சிலவற்றை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அப்பால் பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply