நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ, அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களோ அல்ல:சிறீரெலோ
எமது உயிரினும் மேலான தமிழ் மக்களே!
மிகக் கடுமையான எதிர்ப்புக்கும் மிகப் பல தியாகங்களுக்கும் மத்தியில் அரச படைகள் கிளிநெச்சி நகரை மீட்டிருப்பது என்பது மிகப் பெரிய வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பெரும் நிகழ்வாகவே நாம் கருதுகிறோம். இது ஒரு தனிப்பட்ட இராணுவ ரீதியான வெற்றியாக மட்டுமல்லாமல் ஒரு நிச்சயமற்ற இலக்கை நோக்கி செல்லும் கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசியல் நடவடிககையாகவே நாம் கருதுகிறோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் இந்த வெற்றியை இந்த நாட்டின் அனைத்து மக்களின் வெற்றியாக கருதி தமிழ் மக்களின் சுபீட்சத்தினை உறுதி செய்திருப்பதை நாம் வரவேற்கின்றோம். அவரின் கூற்றின் மேல் நாம் மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறோம். இவ்வளவு காலமும் உங்கள் மீது திணிககப்பட்டயுத்தினால் ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளும் இழப்புகளும் ஈடு செய்யமுடியதவை. யாதார்த்த நிகழ்வுகளை புரிந்து கொள்ளாது, எமக்கு கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்களை தவற விட்டு விட்டு எம்மினத்தின் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் வரலாற்றுப் பாடம் எமக்கு வழிகாட்டியாக்கட்டும்.
மிக வேகமாக முன்னேறிச்செல்லும் பூமிப்பந்திலே எமது மக்கள் பல சகாப்தங்கள் பின் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் ஈடு செய்யும் வகையில் இந்த அரசியல் சூழலை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் தற்போது நாம் எம்மை முழு மூச்சுடன் ஈடுபடுத்தியுள்ளோம். எமது மக்கள் கோர யுத்தத்தின் பிடியில் இருந்து விடுபட ஜனநாயக முறையில் மிக குறிகிய உணர்வுபூர்வமற்ற சிந்தனைக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சுய சிந்தனையோடு எமது அரசியல் பொருளதார மேம்பாட்டிற்காக இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது எமது வேண்டுகோள்
படுகொலை செய்யப்பட்ட எமது தலைவர் சிறீ அண்ணாஅவர்களின் அரசியல் தீர்க்க தரிசனமான மக்களுக்கான அரசியல் சுதந்திரம் உருவாக வேண்டும் என்ற கனவை உண்மையாக்கும் சூழல் கனிந்துவரும் இவ்வேளையில் மக்கள் இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது எமது அன்பான வேண்டுகோள்.
“நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ, அன்றி அது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களோ அல்ல.”
சிறீரெலோ
செயலாளர் நாயகம்
உதயராசா
(உதயன்)
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply