செங்கல்பட்டு சிறப்பு முகாமில் விடுதலை கோரி இலங்கை தமிழர் உண்ணாவிரதம்
தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 32 பேரில் பத்துப் பேரே இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
தாம் இலங்கை போரில் இருந்து பாதுகாப்புக் கோரியே தமிழகத்துக்கு வந்ததாகவும், தமக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும் அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை தாம் பராமரிக்க வேண்டியிர்ப்பதாகவும் ஆகவே பிணையிலாவது தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்களது இந்தக் கருத்து குறித்து இந்திய அரசாங்க தரப்புக் கருத்தினை உடனடியாகப் பெறமுடியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply