மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 40 பேர் கடத்தல்: 10 பேர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் மூன்று பிரதேச சபை பிரிவுகளில் 50 பேர் கடத்தப்பட்டுள்ளதுடன் மேலும் பத்துப் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச சபைகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களை யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று  மட்டக்களப்பில் சந்தித்துப் பேசிய போதே இந்தத் தகவலை வெளியிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவுபற்று, ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மண்முனை மேற்குப் பிரதேச சபை பிரிவில் 16 பேர் கடத்தப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று போரதீவுப்பற்று பிரதேச சபைப் பிரிவில் 27 பேர் கடத்தப்பட்டும் மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவில் ஏழு பேர் கடத்தப்பட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுமுள்ளதாகப் பிரதேச சபைகளின் தலைவர்கள் இங்கு தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பு யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் இலங்கைப் பணிப்பாளர் றெபேக்காகோன் தலைமையில் நடைபெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply