இந்தியக் குழுவின் வருகை காலத்துக்கு பொருத்தமானது : லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

இந்திய பாராளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் காலத்துக்குத் தேவையான ஒரு நிகழ்வு என பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்க ளுக்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று அங்குள்ள உண்மையான நிலைமையைப் பார்க்க அவர்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் கூறினார்.  இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்.

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் அந்தப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பலஸ்தீனத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளபோதும் அவர்களின் மீள்குடியேற்றம் இன்னும் முடிவில்லை. ஆனால், இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களில் 95 வீதமானவர்கள் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய பாராளுமன்றத்தில் விளங்கப்படுத்தி, இது தொடர்பில் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்திய பாராளுமன்றக் குழுவினர் முக்கியமானவர்கள். தமிழ் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை இந்தியா அதிகரிக்க முடியும்.

வடக்கில் நடைபெறும் அபிவிருத்திகள் போதுமானதாகயில்லையென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவந்த பின்னர் தெரிவித்த கருத்தானது ஆதாரங்களின்றி வெளியிடப்பட்ட கருத்து. இந்தக் கருத்து இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘திவிநெகும’ திட்டம்போன்ற பொருளாதாரத் திட்டங்கள் ஊடாக சிறந்த பொருளாதார திட்டங்களை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளார். இவ்வாறான திட்டங்களின் உண்மையான நிலைமையை ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ளவில்லையென்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply