சன் டி.வி செய்தியாளர்களின் ஒளிபரப்புக் கருவிகள் பறிப்பு

இந்திய எம்.பிக்கள் குழுவின் இலங்கை விஜயம் குறித்தான செய்திகளையும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வற்கு சன்.டி.வியின் செய்தியாளர் சிலர் இலங்கை வந்திருந்த நிலைமையில் இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லகூடாது என அறிவித்தல் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுங்க அதிகாரிகளின் இந்தக் கண்டிப்பான உத்தரவால் வெறுங்கையுடனனேயே இந்திய ஊடகர்கள் நாட்டுக்குகள் வந்துள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்ற காரணியைக் கருத்திற்கொண்டே சன்.டி.வியின் தொலைத்தொடர்புக் கருவிகளை நாட்டுக்குள் அனுதிக்கவில்லை என அரச தரப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் சன்.டி.வி. தொலைக்காட்சி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஊடக சுதந்திரத்தைப் பற்றி அடிக்கடி பேசும் இலங்கை அரசு, இவ்வாறு நடந்து கொள்வது சரியா என்று சன் செய்தியாளர்கள் விமாநிலையத்தில் கேள்வி எழுப்பி சுங்க அதிகாரிகளுடன கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply