தம்புள்ளையில் பள்ளிவாசலை இடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகர மத்தியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை இடிக்க வேண்டும் என்று நடத்தப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகைகளை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.பெளத்த பிக்குகள் அடங்கலாக சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கூடிநின்று பள்ளிவாசலை இடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசல் கட்டடத்தை சேதப்படுத்திவிடுவார்கள் என்ற அஞ்சியதாகவும் தாங்கள் பள்ளிவாசல் கட்டடத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்ததாக பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர்  கூறினார்.

முன்னதாக, நேற்றிரவு பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது, சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து தம்புள்ளையிலும் அருகில் உள்ள பிரதேசங்களிலும் பதற்ற நிலமை அதிகரித்திருப்பதாக பிபிசியின் கொழும்பு செய்தியாளர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பள்ளிவாசலில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வெள்ளிக்கிழமை தொழுகைகளும் ரத்துசெய்யப்பட்டுவிட்டன.

தம்புள்ளையை பௌத்தர்களில் பெரும்பாலானவர்கள் புனித பிரதேசமாக கருதுகின்றனர். அண்மைக் காலங்களாகவே இவ்வாறான புனிதப் பிரதேசங்கள் என்று கருதப்படும் இடங்களில் இன ரீதியான குழப்பங்கள் நீடித்துவருவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தம்புள்ளைக்கு சற்று தொலைவிலுள்ள அநுராதபுரம் நகரிலும், கடந்த செப்டம்பரில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் முஸ்லிம்களின் தர்கா ஒன்றை இடித்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply