பிரான்ஸ் அதிபர் தேர்தல் : இன்று வாக்குபதிவு

பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளஅதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்‌கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருடன் சோஸலிஸ்‌ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவாஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு ‌செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

புதுச்சேரியிலும் வாக்குபதிவு : இந்தியா காலனி ஆதிக்கத்தின் கிழிருந்த சமயத்தில் புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகள் பிரெஞ்‌‌‌ச் ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் அனைத்து பகுதிகளும் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பின்னரும் புதுச்‌சேரி மக்கள் பிரான்ஸ் நாட்டுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

 அதன் ஒரு பகுதியாக அங்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு ‌செய்வதற்காக பிரான்ஸ் தூதரகத்தில் 2 ஓட்டுச்சாவடிகளும், விக்டர் சிமோனல் வீதியில் உள்ள லிசே பிரான்சே, செயின்ட் லூயி வீதியில் உள்ள பிரெஞ்‌ச் இன்ஸ்டியூட் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்களுக்கு அப்பகுதியில் அமைந்துள்ள பி‌‌ரெஞ்ச் பள்ளியிலும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் புதுச்சேரி பகுதியில் சுமார் 5 ஆயிரத்து 295 ‌‌ பேர் வாக்களிக்க உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply