இலங்கையில் எந்தவொரு தமிழ்க் கட்சியும் தனி ஈழம் கேட்கவில்லை! – ரங்கராஜன்
இலங்கைக்கு நாங்கள் சென்றிருந்தபோது, அங்கு நாங்கள் சந்தித்த தமிழ் கட்சிகள், தமிழ் குழுக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் சொன்னார்கள். தனி ஈழம் வேண்டும் என்று அங்கு உள்ள எந்த தமிழ் கட்சியும் வலியுறுத்தவில்லை. தனி தமிழ் ஈழம் வேண்டும் என்றோ, தமிழ் மக்கள் பிரிந்து செல்லவேண்டும் என்ற பிரச்சினையையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எடுக்காது என்று கூறியுள்ளார் இலங்கைக்குப் போய் வந்த குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான டி.கே.ரங்கராஜன்.
டி.கே.ரங்கராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தனது இலங்கை சுற்றுப்பயணம் குறித்து விளக்கினார்.
இலங்கையில் தமிழர்களை சந்தித்தபோது, எந்த எந்த இடங்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்று சொன்னோமோ அந்த இடங்களை எல்லாம் உடனடியாக காட்டுவதற்கு தயக்கம் காட்டவில்லை. எங்களுக்கு இலங்கை அரசு எந்த இடத்திலும் தடையோ கட்டுப்பாடோ, எந்த விதமான பாதுகாப்பு வளையமோ விதிக்கவில்லை. இலங்கையில் எல்லா இடங்களிலும் தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
மாணிக்க தோட்டத்தில்தான் பாதிக்கப்பட்ட மக்கள் முள்வேலிக்குள் இருக்கிறார்கள். மாணிக்க தோட்டத்தில் ஒரு பெண் எங்களிடம், எனது மகனையும், மகளையும் காணவில்லை என்று கூறினார். அங்கிருந்து ராணுவ அதிகாரி ஒருவரை அழைத்தோம். அவரிடம் அந்த பெண் கூறியது பற்றி கேட்டோம். அவர் உடனடியாக கண்டுபிடிப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்வதாக கூறினார். அரசு கொடுக்கும் அரிசி, பருப்பு தரம் உள்ளதாக இல்லை என்று அந்த பகுதி மக்கள் சொன்னார்கள்.
நாங்கள் சந்தித்த தமிழ் கட்சிகள், தமிழ் குழுக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் சொன்னார்கள். தனி ஈழம் வேண்டும் என்று அங்கு உள்ள எந்த தமிழ் கட்சியும் வலியுறுத்தவில்லை. தனி தமிழ் ஈழம் வேண்டும் என்றோ, தமிழ் மக்கள் பிரிந்து செல்லவேண்டும் என்ற பிரச்சினையையோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் எடுக்காது.
எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றதின் மூலம், இலங்கை அரசு நல்லது செய்துள்ளது என்றோ, காங்கிரஸ் அரசு நல்லது செய்துள்ளது என்றோ நிச்சயமாக சொல்ல முடியாது. இலங்கை தமிழ் மக்களுக்கு வாழ்க்கை, கல்வி, குடியிருப்பு ஆகியவற்றில் ஏராளமான குறைகள் உள்ளது. இந்த குறைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதுதான் எம்.பி.க்கள் குழுவின் நோக்கம் ஆகும் என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply