களனியில் மரம் நடுவதானாலும் மேர்வினின் அனுமதியுடன் தான் நடவேண்டும்!

களனி பகுதியில் இடம்பெறும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி அமைப்பாளர் ஊடகவே செயற்படுத்தப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைப்பாளர் ஒருவரை நீக்குவது, அமைப்பாளர் ஒருவரை மாற்றுவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையிலேயே தங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களனியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி களனி அமைப்பாளர் அமைச்சர் மேர்வின்சில்வாவின் இணைப்பு அலுவலகம் ஒன்றை இன்று திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கோ வேறு எந்தவொரு பிரிவுக்கோ அமைப்பாளர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு சூழ்ச்சிகள் செயற்படுத்தப்படுவதாகவும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகள், அமைச்சர்களின் செயற்பாடுகளை கொண்டு அரசை கவிழ்க்க முயற்சிக்கலாம் எனவும் அதனால் அமைச்சர்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கப்பம் பெறுதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் ராஜபக்ஷ பரம்பரை இருக்கும்வரை தன்மீது எவராலும் கை வைக்க முடியாது என அமைச்சர் மேர்வின் சில்வா கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply