இந்திய ஜனாதிபதித் தேர்தல்: அப்துல்கலாமுக்கு ஆதரவு அதிகரிப்பு

ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25ஆம் திகதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற எம்.பி.க் கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் வாக்கு போட்டு ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.

காங்கிரஸ் கட்சி தன் விருப்பப்படி ஜனாதிபதியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. அந்த கட்சி கூட்டணிக்கு 8 சதவீத ஓட்டுக்கள் குறைவாக உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளின் கைகளில்தான் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான சக்தி உள்ளது.

இந்த நிலையில் அரசியல் சார்பு இல்லாதவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை மனதில் வைத்து இப்படி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்துல்கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என்று முலாயம்சிங் யாதவ் கூறி வருகிறார். அவருக்கு ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மற்ற மாநில கட்சிகளும் அப்துல் கலாமை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. மாநில கட்சிகளின் ஒருமித்த கருத்தால் அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply