கடற் கொள்ளை அதிகரிப்பு: கூட்டுப் பயிற்சியில் இலங்கை, இந்தியா, மாலைதீவு
அதிகரித்து வரும் கடற் கொள்ளையை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியா, இலங்கை, மாலைதீவு நாட்டு கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த கூட்டுப்பயிற்சி தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
கடற்படையை சேர்ந்த 6 கப்பல்கள் பங்குபெறும் இந்த பயிற்சிக்கு டோஸ்டி 11 என பெயிரிடப்பட்டு உள்ளது.
இந்தியா சார்பில் சங்கல்ப் மற்றும் சுபத்ரா என்ற போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
சமீபத்தில் இலங்கை மாலுமிகள் 6 பேர் சோமாலிய கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்டு கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply