இந்தியப் பிரஜைகளால் டக்ளஸ் தேவானந்தாவை தடுத்து வைக்கலாம் – சந்தர்ப்பம் கொடுக்கும் சட்டத்தரணி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியக் கடற்பரப்புக்குள் பிரவேசித்தால் எந்தவொரு இந்தியப் பிரஜையும் அவரைத் தடுத்துவைக்க முடியும் என்று தமிழக சட்டத்தரணி பி.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் ஊடுருவுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக 5 ஆயிரம் மீனவர்களுடன் இந்தியக் கடலுக்கள் பிரவேசிக்கப் போவதாக அமைசசர் டக்ளஸ் தேவானந்தா அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்டத்தரணி இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1986 கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தேடப்படுகிறார். அமைச்சருக்கு எதிராக சர்வதேச பொலிஸாருக்கு அறிவிப்பதற்கான அறிவுறுத்தலை விடுக்குமாறு மாநில உள்துறை செயலாளருக்கும் பொலிஸ் பணிப்பாளர் நாயகத்திற்கும் உத்தரவிடுமாறு சென்னை மேல் நீதிமன்றில் புகழேந்தி அண்மையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டவிரோதமாக இந்தியக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க முயன்றால் அவரைக் கைது செய்யும் முயற்சிகளை தமிழக பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தா உள்ளார். அவர் இநத மாதிரியான போராட்டத்தை முன்னெடுக்கும் போது அமைச்சர் என்ற ரீதியில் இராஜதந்திர சிறப்பு விடுபாட்டைக் கொண்டவராக இருக்கமாட்டார்.
இது அவரை தமிழகப் பொலிஸார் கைது செய்வதற்கான சந்தர்ப்பமாகவும், 1986 சூட்டுச் சம்பவம் பற்றிய கொலை வழக்கு விசாரணையை அவர் எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டவர். அதனால் எந்தவொரு இந்தியப் பிரஜையும் அவரைத் தடுத்து வைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply