இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் அரசியல் சூழ்நிலை உறுதிப்படுத்தப்படும்!

இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் இலங்கையில் அரசியல் சூழ்நிலை உறுதிப்படுத்தப்படும் எனவும் தென் கொரிய லீ மியூங் பெக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென் கொரியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்று 23ம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த மாநாடு ஒடிடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவுக்கு இரு யானைகளை அன்பளிப்பாக அனுப்பியமைக்காக இலங்கைக்கு தென் கொரிய ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் சுமார் 20 000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்கள் தென் கொரிய பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்கு வகிப்பதாகவும் தென் கொரிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொழிலாளர்கள் தொகையை அதிகரிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

தென் கொரியா மற்றும் இலங்கைக்கு இடையில் 1977ம் ஆண்டு தொடக்கம் நட்புறவு இருந்து வருகிறது.

இதேவேளை, இலங்கையின் கட்டுமானப் பணிகளுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க தென் கொரிய பொருளாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply