இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில்

இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதன்படி அடுத்த மாதம் 26ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று 24ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பள உயர்வு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் குறித்து மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளபோதும் இதுவரை தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி வரும் அரசாங்கம் தங்களை ஏமாற்றி வருவதாக அந்த சங்கம் ஏற்கனவே கூறிள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply