ஜனாதிபதி விழிப்பாக இருக்க வேண்டும்: அரசுக்குள் சூழ்ச்சி!
அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளேயே சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து ஜனாதிபதி விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 30 வருட யுத்தத்தில் இருந்து நாடு மீட்கப்பட்டு சுதந்திரம் கிட்டியபோதும், அது தொடர்பில் பொது மக்கள் பேதமின்றி மகிழ்ச்சியடைந்த போதும் சர்வதேச சூழ்ச்சியால் இலங்கை வலைக்குள் சிக்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக செயற்படும் வேளையில் அதற்கு சமமான சூழ்ச்சி அரசாங்கத்துக்குள்ளும் மேற்கொள்ளப்படுவதாக ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி விழிப்புடன் இருக்க வேண்டும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
தம்புள்ளை புனித பூமியில் முஸ்லிம் பள்ளிவாசல் அமைப்பது அதன் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களுக்கு இடையில் பேதம் ஏற்படுத்துவது அரசாங்கத்தின் உள்சூழ்ச்சியின் புதிய வடிவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளையில் சம்பவத்தின் மூலம்இ தம்புள்ளையில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும் இதற்கு அரசாங்க தரப்பில் உள்ள சிலரும் ஆதரவு அளித்துள்ளதாகவும் அப்படியானவர்களுக்கு தராத்திரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply