துருக்கிக்கான முதலாவது தூதுவர் நியமனம்
துருக்கியுடனான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை துருக்கிக்கான முதலாவது தூதுவரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரான மறைந்த மனோ விஜேரத்னவின் மகன் பார்த்தி விஜேரத்ன துருக்கிக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்த்தி விஜேரத்ன இதற்கு முன்னர் துருக்கிக்கான இலங்கையின் கொன்சூல் ஜெனரலாக பதவி வகித்து வந்தவராவார்.
2008ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி துருக்கிக்கு விஜயம் செய்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது.
இலங்கையின் தேயிலை விற்பனையிலும் துருக்கி பாரிய பங்கை வகிக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply