அரசுக்கு எதிரான போராட்டம்: ஐநாவை அலட்சியப் படுத்திய சிரியா அரசு
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்- ஆசாத்துக்க எதிராக ஒரு ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவம் இதுவரை சுமார் 10 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளது.
எனவேஇ உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை கோபி அன்னானை சமாதான தூதுவராக அனுப்பியது. அவர் சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகும் சிரியா இராணுவம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எதிர்ப்பாளர்கள் இராணுவ வாகனங்களையும்இ அதிகாரிகளையும் குறிவைத்துத் தாக்குகின்றனர். தலைநகர் டமாஸ்கஸில் 3 இடங்களில் இத்தகைய தாக்குதல்கள் நேற்று நடைபெற்றன. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் 2 பேர் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் போர் நிறுத்தம் நடைபெறுகிறதாஇ மக்கள் ஒடுக்கப்படுகின்றனராஇ இராணுவம் அத்துமீறுகிறதா என்று கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவைத்த பார்வையாளர்கள் நகரின் சில பகுதிகளில் மக்களை நேருக்கு நேர் சந்தித்துத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல்கள் நடந்தன.
திங்கள்கிழமை நாடு முழுக்க பல நகரங்களில் இராணுவம் நடத்திய தாக்குதலில் 55 பேர் உயிரிழந்தனர். ஆனால் அரசை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களோ அவற்றை சட்டை செய்யாமல் கண்ணில் பட்ட இராணுவ வாகனங்களையும் அதிகாரிகளையும் தாக்கினர். சிரிய அரசு ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த வாக்குறுதியைக் கடைப்பிடிக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவுத் தலைவர் லின் பாஸ்கோ தெரிவிக்கிறார்.
‘பீரங்கிகள்இ கனரக இயந்திரத் துப்பாக்கிகளைப் போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்துகிறதுஇ நகரங்களிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. அரசுக்கு எதிராக மக்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியுங்கள் என்பதையும் கேட்கவில்லை. சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும்இ ஜனநாயக உரிமைகளை அனுமதிக்க வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கைகள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல’ என்று பாஸ்கோ கூறுகிறார்.
சிரியாவில் நடக்கும் படுகொலைகளைத் தடுக்கத்தான் பார்வையாளர் குழுக்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பினோம் அப்படியும் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply