விடுதலைப் புலிகள் இயக்க பிரபல உறுப்பினரது தகவலை மறைத்த நபர் தொடர்ந்தும் தடத்து வைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவி புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்ஷ்மன் குரேவை தொடர்ந்தும் பூசா முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று குற்றத் தடுப்புப் பிரிவினரால் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ், சந்தேகநபரை எதிர்வரும் 16ம் திகதிவரை பூசா முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபல உறுப்பினரான ரமேஸ் என்பவர் குறித்து தகவல் அறிந்திருந்தும் அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்காமல் மறைத்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி லக்ஷ்மன் குரே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply