எண்ணெய்க் கிணற்று உரிமை: தெற்கு சூடானுக்கு எதிராக சூடான் போர் அறிவிப்பு!

ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் கடந்த ஆண்டு தனிநாடாக பிரிந்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இருநாடுகளின் எல்லை பகுதியில் ஹெக்லிக் என்ற இடம் உள்ளது. இங்கு ஏராளமான எண்ணை கிணறுகள் உள்ளன. இவற்றுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால்தான் மோதல் நடக்கிறது.
இந்த நிலையில் ஹெக்லிக் பகுதியை தெற்கு சூடான் இராணுவம் கைப்பற்றி கொண்டது. அங்கிருந்து வெளியேறும்படி சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் எச்சரிக்கை விடுத்தார். ஆனால் தெற்கு சூடான் அதை பொருட்படுத்தவில்லை. எனவே சூடான் விமானங்கள் மூலம் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது. 10 நாட்களுக்குள் தெற்குசூடான் படைகள் வாபஸ் வாங்காவிட்டால் தெற்கு சூடானை நசுக்கி விடுவேன் என்று அவர் எச்சரித்தார்.
10 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் தெற்குசூடான் படைகள் வாபஸ் பெறவில்லை. இதனால் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் தெற்கு சூடான் மீது போர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் சூடான் விமானங்கள் எல்லையில் உள்ள தெற்கு சூடான் பகுதியில் சரமாரி குண்டுவிசி தாக்கின. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக தெற்குசூடான் கவர்னர் தபான்டெங் சூடானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சூடான் விமான தாக்குதலை நிறுத்தாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம். சூடான் மீது கருணை காட்டாமல் எங்கள் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். போரினால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் எற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply