சுண்டிக்குளத்தில் கரும்புலிகளின் 125 படகுகளை இராணுவத்தினர் கைப்பற்றினர்
யாழ். சுண்டிக்குளம் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த படையினர் அங்கு தமழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிப் படைப் பிரிவுக்குச் சொந்தமான 125 படகுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் படகுகள் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை கொண்டு செல்வதற்கும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது.
இராணுவத்தின் 55 படைப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது இரண்டு லொறிகள், ஐந்து உழவு இயந்திரங்கள், 400 கண்ணிவெடிகள், மின்பிறப்பி, நிலத்தைப் பண்படுத்த உதவும் பாரிய இயந்திரம் ஆகியவற்றையும் மீட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply