நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பொன்சேகாவிற்கு அனுமதி

முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவிற்கு கொழும்பு – நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வழி செய்து கொடுக்கப்பட வேண்டும் என சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சேவையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.

சரத் பொன்சேகா நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அவருக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் பொன்சேகா தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர் வஜிர தென்னகோன் இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி அளிக்காவிட்டால் சரத் பொன்சேகாவின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியதை அடுத்து நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply