தமிழகத்தில் இதுவரை பன்றிக் காய்ச்சலில் 4 பேர் பலி: 77 பேர் பாதிப்பு
தமிழ்நாட்டில் இதுவரை 77 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேர் அரசு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார்கள் என சட்டசபையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 4 பேர் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் தனியார் மருத்துவ மனைகளில் ஆரம்பத்தில் சிகிச்சை பெற்ற போது டாமி புளு மாத்திரை கொடுக்கப்படாததாலும் நோய் தாக்கம் அதிகமாகி இறந்து விட்டார்கள் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நோய் கண்டறியப்பட்டவுடன் டாமிபுளு மாத்திரை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இல்லையென்றால் வைரஸ் ரத்தத்தில் பரவி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். தனியார் வைத்தியசாலையில் டாமிபுளு மாத்திரைகள் பெரும்பாலும் கொடுக்கப் படுவதில்லை.
எனவே பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலாவிட்டால் உடனே அந்த நோயாளிகளை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply