மர்மப் பொருள் வெடித்ததில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உடல் சிதறி பலி

தென்மராட்சி பளைப் பகுதியில் மக்கள் மீள்குடியேறிய பகுதியில் நேற்று மாலை வீடொன்றுக்கு அருகே வெடிபொருளொன்று வெடித்ததில் சகோதரச் சிறுவர்கள் இருவர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

பளைச்சந்திக்கு சமீபமாக முல்லையடி மணியந்தோட்டப் பகுதியிலேயே மாலை இந்த பரிதாபகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களது வீட்டில் தாயார் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது சகோதரர்களான முகுந்தன் தனுஷன் (4 வயது) முகுந்தன் தமிழ்மாறன் (2 வயது) இருவரும் வீட்டின் அருகே இருந்த இரும்புப் பொருளொன்றை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறவே சகோதரச் சிறுவர்கள் இருவரும் அவ்விடத்திலேயே உடல் சிதறிப் பலியானார்கள்.

இவர்கள் இருவரதும் உடல்கள் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

எங்கிருந்து இந்த மர்மப் பொருள் வந்ததெனத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply