மே தினத்தை கொண்டாடுவதில் ஐதேக தலைவர், பிரதித் தலைவர் முரண்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் என அக்கட்சியின் மத்திய செயற்குழு கூடி முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகள் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மே தின நிகழ்வோடு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு நிகழ்வும் கொழும்பில் இடம்பெறும் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் எனவும் அதில் அனைத்து கட்சி முக்கியஸ்தர்களும் பங்கேற்பது கட்டாயம் எனவும் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று 25ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எனினும் பிரதான மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கொழும்பு பிரேமதாஸ நினைவு தினத்தில் கலந்து கொள்ள சஜித் பிரேமதாஸவும் மற்றுமொரு ஐதேக பாராளுமன்ற உறுப்பினரும் அனுமதி கோரியதாகவும் அதற்கு கட்சி அனுமதி அளித்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறி ஒரு பொழுது செல்வதற்கு முன்னர் திஸ்ஸ கூறியது பச்சை பொய் எனவும் தான் அவ்வாறு கட்சியில் அனுமதி எதுவும் கோரவில்லை எனவும் ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று 25ம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் அறிவித்தார்.

தனது தந்தையின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என முழு இலங்கைக்கும் சஜித் நேற்று தெரியப்படுத்தினார்.

எனினும் சஜித் பிரேமதாஸவின் பொய் முகத்தை திஸ்ஸ அத்தநாயக்க இன்று 26ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஐதேக மே தினக் கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாதிருக்க தனக்கு அனுமதி அளிக்கும்படி ஐதேக பொதுச் செயலாளருக்கு சஜித் பிரேமதாஸ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை திஸ்ஸ அத்தநாயக்க இன்று ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தினார்.

ஐதேகவின் அனைத்து உறுப்பினர்களையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துள்ள தலைவர் ரணில் விக்ரமசிங்கஇ சஜித் பிரேமதாஸவின் கோரிக்கையை ஏற்று கொழும்பு நிகழ்வில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி அளித்துள்ளார்.

ஆனால் தனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவை நடு வீதியில் கொலை செய்த தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் மே தினம் கொண்டாடப் போகிறது என சஜித் பிரேமதாஸ தனது உச்சக்கட்ட இனவாத கருத்தை நேற்று வெளியிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply