கணினி பாவனையாளர்களே கவனம்: உங்கள் திசையை மாற்றுகிறது வைரஸ்

பிரதிகூலமான கணினி வைரஸ் ஒன்றின் காரணமாக கணினி பாவனையாளர்கள் இணையத்தில் பிரவேசிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் கணினிக்குள் நுழைந்த பின் கணினியில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களை ஆபாச இணையத்தின் பக்கமாக இழுத்துச் செல்வதாகவும் அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது.

htt://www.dcwg.org/detect என்ற இணையத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் குறித்த வைரஸில் இருந்து உங்கள் கணினியை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனினும் இந்த வைரஸ் குறித்து இதுவரை தமக்கு எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 9ம் திகதி குறித்த வைரஸில் இருந்து பாதுகாப்பை பெறும் வகையில் அமெரிக்காவின் குடீஐ விசாரணை பிரிவு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அதன் பின்னர் அந்த வைரஸ் தாக்கப்பட்டுள்ள கணினிகளில் இருந்து இணையத்திற்கு பிரவேசிக்க முடியாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply