பாக்தாத்தில் கார் குண்டு வெடித்ததில் 5 பேர் கொலை, 27 பேருக்கு காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை சாலையோரத்தில் கார் குண்டு வெடித்ததில், 5 பேர் கொல்லப்பட்டனர். 27பேர் காயமடைந்தனர். பாக்தாத் நகர பொலிசார் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களின் தகவல் அடிப்படையில் ஈராக்கிய செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் ஹூரியா மாவட்டத்தின் சதர் நகரத்தில், அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடி, மற்றும் வாகனங்களில் சென்றபடி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து இந்த கார் குண்டு தாக்குதல் நடந்துள்ளது.

ஈராக்கில் நடந்து வரும் தொடர் தீவிரவாத தாக்குதல்களில் கடந்த வாரம் மட்டும் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 20 குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் அல்-கொய்தா சார்புள்ள இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஷியாஇ சன்னி, குர்துஸ் மக்களிடையே எழும் மோதலால் அங்கே அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறிய பிறகு இந்தச் சண்டைகள் அதிகரித்து விட்டதாகவும், அமெரிக்க சார்பு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply