மன்னர் ஆட்சி வேண்டாம்! மக்களாட்சி கோரி பஹ்ரைனில் போராட்டம்
பஹ்ரைனில் ஜனநாயக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது மக்கள் பொலிஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பொலிஸ் நிலையம் பற்றி எரிந்தது.
தலைநகர் மனாமா அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது பஹ்ரைனை ஆளும் மன்னர் ஹமாத் அல் ஹலிபாவுக்கு எதிராக கோஷமிட்ட, உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து வன்முறையாளர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இருப்பினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருவதால் பஹ்ரைனில் பதற்றம் நீடித்து வருகிறது.
பஹ்ரைனை ஆளும் அல் ஹலிபா குடும்பத்தினர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பெரும்பான்மையாக வாழும் ஷியா பிரிவினர் கடந்த ஓராண்டாக போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply