வட மாகாண பாடசாலை புனரமைப்பிற்கு 704 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வட மாகாணத்தில் 682 பாடசாலைக் கட்டடங்கள் 704 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 158 மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. 2010 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 752 பாடசாலைகள் இயங்கு நிலையில் காணப்பட்டன. 259 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது 937 பாடசாலைகள் இயங்குவதுடன் 101 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரத்து 800 சைக்கிள்கள் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இது மாத்திரமின்றி 86 ஆயிரத்து 202 பாடசாலை மாணவர்களுக்குரிய தளபாடங்களும்இ 2 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்குரிய தளபாடங்களும் 12 ஆய்வு கூடங்களுக்கான உபகரணங்களும் 362 கணணிகளும் வழங்கப்பட்டுள்ளாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply