நித்தியானந்தாவின் நியமனம் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டது: மதுரை ஆதீனம் விளக்கம்
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நித்தியானந்தா முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆதீனத்தின் தற்போதைய மடாதிபதியான அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்துள்ளார்.
முன்பு ஊடகங்களால் வெளியிடப்பட்ட, நித்தியானந்தா நியமனத்தை 80 சத மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவரது நியமனத்தால் மதுரை ஆதீனத்துக்கு எந்தவிதக் களங்கமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மதுரை ஆதீனம், நித்தியானந்தாவுக்கு விலைபோய்விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று அவர் கருத்து வெளியிட்டார்.
அதே நேரத்தில், அடுத்த மடாதிபதியை நியமிக்கும் முழு அதிகாரம் மதுரை ஆதீனத்தின் தற்போதைய மடாதிபதியாகிய தனக்குத்தான் உள்ளதாகவும் அதுபற்றிக் கேள்வி எழுப்ப யாருக்கும் உரிமை இல்லை என்றும் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் தெரிவித்தார்.
பண பலத்தின் அடிப்படையில் மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக தான் நியமிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனம் முழுக்க முழுக்க தவறானது என்றும் ஆதீனத்துக்கு ஏற்கெனவே பலகோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தனது தலைமையின் கீழ் மதுரை ஆதீனத்தின் சார்பில் உலகம் முழுவதும் கிளைகள் உருவாக்கப்படும் என்றும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என்றும் நித்தியானந்தா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply