செங்கல்பட்டு முகாம்களில் மேலும் 7 இலங்கை அகதிகள் வைத்தியசாலையில் அனுமதி
தமிழ்நாடு – செங்கல்பட்டு முகாம்களில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் மேலும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்ததால் அவர்களுடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 10க்கும் மேற்பட்டோர் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை திறந்தவெளி சிறைக்கு மாற்றக் கோரி கடந்த 17ஆம் திகதி முதல் ஈழத்தமிழர்கள் விக்ரமசிங்கம, அருள் குலசிங்கம், சதீஷ்குமார், சிவக்குமார், நாகராசு, பராபரன், நந்தகுமார், ஜெயராமன், சேகர், சதர்சன் உள்பட 14 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் உண்ணாவிரதம் இருந்து வந்த சேகர்இ நாகராசுஇ சுதர்சன் உள்பட 5 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் 14வது நாளை எட்டியுள்ள நிலையில்இ இன்று மேலும் 7 பேரின் உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன் என்று கூறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாஇ தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களை வதைப்பது ஏன் என்று சமூக ஆர்வளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply