தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: இலங்கை தூதரகத்தை தாக்கும் கூட்டணியில் மதிமுகவும் இணைவு
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சென்னையில் நாளை நடத்தவுள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கவுள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் வழிப்பாட்டு தலங்களை தாக்குவதும்இ நாசப்படுத்துவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்போது, தமிழ் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதிகளை தாக்க ஆரம்பித்து உள்ளது. தம்புள்ளை பள்ளிவாசல் பௌத்த பிக்குகலால் கடந்த 20ஆம் திகதி தாக்கப்பட்டது.
இதனை கண்டித்து, வரும் 30ம் திகதி மாலை 4 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இந்த போராட்டத்தில் மதிமுக பங்கேற்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply