உத்தர பிரதே பேருந்துகள் விபத்தில் 18 பேர் பலி
இந்தியாவில் வடக்கு மாநிலமான உத்தர பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் லக்னோவிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொராக்பூர் நகருக்கு அருகில் அளவுக்கதிகமான ஆட்களை ஏற்றிச்சென்றுள்ள இந்த இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளன.
அரச பேருந்துடன் மோதுண்ட தனியார் பேருந்து குடைசாய்ந்து வீதியோரத்திலிருந்த பள்ளமொன்றுக்குள் விழுந்துள்ளது.
உலகிலேயே வீதி விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கின்றது.
அதிக வேகம், கவனக் குறைவான பயணம் மற்றும் வீதிக் குறைபாடுகள் காரணமாகவே இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை நடப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த 2010ம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 345 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply