யாழில் நடைபெறவிருக்கும் மே தின கொண்டாட்டத்தை குழப்ப சதி – ஐதேக

யாழ். குடாநாட்டில் நடைபெறவுள்ள மேதினத்தை குழப்புவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு இருப்பதாக ஜ.தே. கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இன்று திங்கட்கிழமை யாழ். விடுதி ஒன்றில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்ட ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,

தென்பகுதி மக்களை யாழில் நடைபெறவுள்ள மேதினத்தில் கலந்து கொள்ளாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களோடு இணைந்து வரலாற்றில் பக்கத்தை மற்றியமைக்க எண்ணுகின்றோம். சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த முனைகின்றோம்.

இந்த செயற்பாட்டை தென்பகுதியில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் நாங்கள் புத்துயிர் கொடுப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது வேடிக்கையான ஒன்று தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது அரசு.

இனவாதத்தை தூண்டி மீண்டும் இனங்களுக்கடையில் பிரிவினை வாதத்தை வளக்க முயற்சிக்கிறது. ஜதே.கா எப்போதும் இனவாதம் பேசியது அல்ல என்பதை தமிழ் மக்கள் நன்றாக விளங்கியிருப்பார்கள் என ஜ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

DISQUS...
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply