ஒலிம்பிக் தீபம் ஏற்றும் குழுவில் இலங்கைத் தமிழரும் தெரிவு
லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்னர் போட்டிக்கான தீபத்தை ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் இலங்கையைத் சேர்ந்த தமிழ் மாணவர் ஒருவரும் அடங்குகிறார்.
லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக 8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட அலுமினிய தீபம் உருவாக்கப்பட்டுள்ளது.
8 ஆயிரம் துவாரங்கள் கொண்ட இத்தீபத்தை 8 ஆயிரம் பேர் 8 ஆயிரம் மைல்கள் எடுத்துச் செல்வர். இந்த ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லப்படும் பாதைகள், ஏந்திச் செல்வோர் பற்றிய விவரங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளன.
இப்படி ஏந்திச் செல்வோரில் நியூகாஸ்டல் பல்கலைக் கழகத்தில் உயிரி மருத்துவம் படித்து வரும் முருகேசப்பிள்ளை கோபிநாத் என்ற மாணவரும் ஒருவர்.
இவர் இலங்கை மல்லாவியைச் சேர்ந்தவர். தாம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறது என்கிறார் முருகேசப்பிள்ளை கோபிநாத்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply