கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் விபரங்களை வெளியிட சுவிஸ் வங்கி இணக்கம்
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த சில விவரங்களை இந்திய அரசிடம் கொடுக்க அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் தங்களின் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். அதை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டிடம் அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள் குறித்து கேட்டதற்கு அந்நாடு முதலில் வழங்க மறுத்தது. ஆனால் தற்போது இந்தியர்களி்ன் ரகசிய கணக்குகளை இந்தியாவுக்கு தர சம்மத்திதுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஏப்ரல் 20ம் திகதியன்று ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரட்டைவரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களை அடையாளம் காணக்கூடிய அளவிலான குறிப்பிட்ட விவரங்களைத் தர அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திBoth comments and pings are currently closed.