இலங்கை திரும்பும் அகதிகள் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவதில்லை! பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எவரும் சித்திரவதை செய்யப்படுவததில்லை எனபிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

‘இலங்கைக்குத் திரும்பும் குடியேற்றவாசிகளும் அகதிகளும் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன.

பிரிட்டனிலிருந்து திரும்புபவர்கள் தொடர்பான இத்தகைய அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் விசாரரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை’ என 2011 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply