இலங்கை தமிழரின் மறு வாழ்வு பற்றியே மத்திய அரசின் கவனம் உள்ளது!
திருச்சியில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு `தமிழ் ஈழம்´ ஒன்றே தீர்வு என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறி இருக்கிறார். மேலும் `டெசோ´ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கி இருப்பதால் தி.மு.க-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுமா?
இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறு வாழ்வையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் தான் நாங்கள் கவனமாக பார்த்து வருகிறோம்.
அதனால் தான் ஐ.நா. மன்றத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
மேலும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அந்த குழுவினர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வுகள் தொடர்பான திட்டங்களை கொடுத்து விட்டு வந்து இருக்கிறார்கள். இவ்வாறு ஜி.கே.வாசன் பதிலளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply