வன்னியில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மேலும் மனிதாபிமான உதவி
வடபகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுகு சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான மனிதாபினமான உதவிப்பொருட்களை வழங்கமுன்வந்திருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது.
இது குறித்து வெள்ளிக்கிழமையன்று அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம், வடக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனிதாபிமானத் தேவைகளை வழங்குவதில் இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா தொடர்ந்தும் செயற்படுமென்றும், இதனடிப்படையில் 40 மில்லியன் பெறுமதியான இரண்டாவது தொகுதி மனிதாபிமானப் பொருட்களை அனுப்பிவைக்க தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.இதன் ஒரு அங்கமாக கொழும்புக்குத் தற்போது விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்சவிடம் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களடங்கிய பொதியைக் கையளித்திருப்பதாக, இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
இலங்கையின் வடக்கே மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களை வழங்கும் முடிவினை இந்தியா கடந்த அக்டோபர் மாதம் எடுத்திருந்தது. அதனடிப்படையில் ஏற்கனவே சுமார் 1700 மெற்றிக் தொன் உதவிப்பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக இலங்கை அரசின் அனுசரணையுடன் வன்னியில் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply