இலங்கை வந்த குழுவினர் நாளை பிரதமரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிப்பர்
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய எம்.பி.,க்கள் குழு நாளை 3ம் திகதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
எம்.பி.,க்கள் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பிரதமரை சந்திக்க உள்ளனர்.
இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து பிரதமருடன் கலந்தாலோசிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது எம்.பிக்கள் பிரதமரிடம் அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை வந்து ஆராய்ந்து சென்ற தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply