ஐரோப்பிய நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் உச்ச நிலையை எட்டி விட்டது
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக அதிகரித்துள்ளது. இது அங்குள்ள மக்கள் தொகையில் சுமார் 11 சதவீதமாகும்.
இந்த நாடுகள் அனைத்திலும் ஒற்றை நாணயமாக யூரோவின் பயன்பாடு தொடங்கிய பிறகு, இப்போதுதான் இந்த அளவுக்கு அந்த நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது.
இந்த நாடுகளில் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்று தொழில்துறை வல்லுநர்கள் வெளியிட்டுள்ள, தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒரு முக்கிய ஆய்வறிக்கை வந்துள்ள நிலையில், வேலையின்மை தொடர்பிலான இந்தத் தகவலும் வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply