திசைமாறி வந்தவர்களையும் அடித்து விரட்டிய கடற்படை – இந்திய மீனவர்கள் கவலை

திசைமாறி கச்சதீவு கடற்பரப்பில் ஒதுங்கிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் உடனே செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இந்த​ சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடலில் மீன் வளம் பெருகுவதற்காக தற்போது விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாட்டுப் படகு மீனவர்களுக்கு இந்த தடை கிடையாது. அவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது.

இதில் 5 படகுகள் அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து காற்றடித்த திசையை நோக்கி சென்றன. இறுதியில் அந்த 5 படகுகளும் கச்சத்தீவில் கரை ஒதுங்கின. அந்த படகுகளில் இருந்த 25 மீனவர்களும் கச்சத்தீவில் இறங்கி நின்றனர்.

அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு அங்கு வந்தது. இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்களை இங்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு காற்று அடித்ததால் திசை மாறி வந்துவிட்டோம் என்றும் உயிர் பிழைக்க இங்கு கரையேறியுள்ளோம் என்றும் கூறினார்கள்.

ஆனால் அவர்கள் சிறிதும் மனிதாபிமானம் இன்றி, ‘இங்கே யாரும் நிற்கக்கூடாதுஇ உடனே உங்கள் பகுதிக்கு சென்றுவிடுங்கள்’ என்று கூறி விரட்டியடித்தனர். இதனால் 25 மீனவர்களும் தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டு திரும்பினார்கள். காற்று தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு நேற்று பாம்பன் வந்து சேர்ந்ததாக மீனவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply