முல்லைத்தீவு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க நீதிமன்றம் செல்லும் பெப்ரல்
முல்லைத்தீவு மாவட்ட வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவென எதிர்வரும் காலத்தில் பெப்ரல் அமைப்பு நீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராகவே இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை தேர்தல் செயலகம் பிற்போட்டு வருவதாக பெப்ரல் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நிறைவுபெறும்வரை தேர்தல் நடத்த வேண்டாம் எனக்கூறி பிரதேச மக்கள் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது குறித்து கருத்து முன்வைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றில் அதற்காக அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்க முன்வரவுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply