20 பேர் சுட்டுக் கொலை: ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக வேட்பாளர்கள் அறிவிப்பு
எகிப்து நாட்டில் அதிபர் முபாரக் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு இடைக்கால ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனாலும் இராணுவ ஆட்சி உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நேற்று கெய்ரோ சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இராணுவ ஆட்சி ஆதரவாளர்கள் திடீரென போராட்டக்காரர்கள் மத்தியில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
வெடிகுண்டு வீச்சுஇ துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தால் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக 4 வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply