மாட்டுச் சந்தையில் சரமாரியான துப்பாக்கிச் சூடு: 34 பேர் பலி
வட கிழக்கு நைஜீரியா, யோபி மாநிலத்தில் உள்ள போட்டில் பகுதியில் அமைந்துள்ள மாட்டுச்சந்தையில் நேற்று ஆயதங்களுடன் கூடிய கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இக்கும்பலில் நபர் ஒருவர் கண்முடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இக்கும்பலில் ஒருவனை பிடித்த வர்த்தகர்கள் அவன் மீது பெட்ரோல் ஊற்றி கழுத்தில் டயரை மாட்டி தீ வைத்து கொளுத்தியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
20 வெடிகுண்டுகள் மற்றும் ஒரு துப்பாக்கி இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டோயின் பாடஜ்சின் தெரிவித்தார்.
பொலிஸார் இறந்தவர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க முடியவில்லை. ஆனால் இத்தாக்குதலை நேரில் பார்த்த மக்கள் 40 ற்கும் மேற்பட்ட மக்கள் இத்தாக்குதலில் மரணமடைந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply